வரணி நாவற்காடு பகுதியின் கிராமசங்கத்தின் கல்வி பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வு.

வரணி நாவற்காடு பகுதியின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கல்வி பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வு. இன்று மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கு.சபேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதம விருந்தினராக வடமாகாண போக்குவரத்து மற்றும்
மீன்பிடி அமைச்சர் டெனிஷ்வரன் கலந்துகொண்டு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கல்வி பிரிவை அங்குரார்பணம் செய்துவைத்தார்.

பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் டெனிஸ்வரன் தமது அமைச்சின் நிதியியல் இருந்து. வரணி சிட்டிவேரம் மிருசுவில் வீதி புணரமைப்புக்கு இருபது லட்சம் ரூபாவும் கிராமஅபிவிருத்திச்சங்கத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்க முன்வந்துள்ளார்.

மேலும் இக் கிராமத்தின் மாணவர்களின் கணனிக் கல்வி வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் பிரேம் குமார் தனது தந்தையின் ஞபகார்த்தமாக 100 000 பணத்தை
வழங்கினார்.

வரணி நாவற்காடு

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்