தொதல் செய்வது எப்படி

தொதல் செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

தேங்காய்ப்பால் – 2 டின்
சிவப்பு அரிசிமா – 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
தண்ணீர் – 1 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி – 400 கிராம் (அல்லது தேவையான இனிப்புக்கு ஏற்ப)
வறுத்த உடைத்த பயறு – ஒரு கைப்பிடி
கஜு (முந்திரி) – 25
பட்டர் – 1 தேக்கரண்டி
வனிலா/ஏலக்காய் – சிறிது
செய்முறை:
கஜுவை பட்டரில் வறுத்து எடுக்கவும்.
கித்துள்/சர்க்கரையை சிறிய துண்டுகளாக நொருக்கவும். பிரவுண் சீனியாயின் அப்படியே போடலாம்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சிவப்பு அரிசிமா, தண்ணீர், சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி, பயறு என்பவற்றை ஒன்றாக கலந்து சிறிது அதிகமான தீயில் வைத்து எண்ணெய் பிறக்கும் வரை கிளறவும்.
எண்ணெய் பிறந்து கலவை சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும், ஏலக்காய்/வனிலா, கஜு சேர்த்து கிளறி ஒரு தட்டில் கொட்டி சமமாக பரவி ஆற விடவும்.
கலவையை அடுப்பில் வைத்து கிளறும் போது கலவை கொதித்து தெறிக்கப் பார்க்கும். எனவே கைக்கு உறை போட்டு அல்லது நீண்ட கைப்பிடி உள்ள கரண்டி/அகப்பையால் கிளறவும்.கலவை நன்கு சுருள 40 – 45 நிமிடங்கள் எடுக்கும் கலவை நன்கு சுருண்டதும் தேங்காய் எண்ணெய் பிறக்கும். அதனை வடித்து எடுத்து விடலாம்.

உடனே சாப்பிடுவதை விட வைத்து அடுத்த நாள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சுவையான தொதல் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்