என் உயிர் தந்த தந்தையே..! -நியூ வரணியின் கவிதை பூங்கா

உயிர் தந்த என் தந்தையே

உயிர் தந்த என் தந்தையே

உங்கள் உதிரத்தில்
உதித்த முத்து நான்
உறங்கும் போது
உங்கள் தாலாட்டு
உண்ணும்போது உங்கள் உணவு
உண்மையான உறுதியான
உற்சாகத்துடன் உயிர் கொடுத்து
இப்புவியில் தவழவிட்டீர்
தவமான என் தந்தையே
பூமியில் நல்லதை விதைத்த
உயிர் தந்த என் தந்தையே
இந்த உடல் சாயும் வரை
உங்களை மறவேன்
என் தந்தையே..!

 

 

கவி – கீர்த்தியாணி

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்