இனி கவலையில்லை! – நியூ வரணியின் கவிதை பூங்கா

varany kavithai

எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!

எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!

எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!

எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!

எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!

எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!

எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!

ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!

முகவை முத்தூஸ், தொண்டி.

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்