ராசி பலன்களை – 2017 தெரிந்துகோள்ள

rasi palan 2017

2017 கான ராசி பலன்

மேஷம் / Mesham

மேஷம்இந்த வருடம் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். ரொம்ப எனேர்கஜிடிக் ஆகவும் ஃபீல் பண்ணுவீர்கள்.
வருட மத்தியில் நீங்கள் செய்கின்ற தொழிலில் அல்லது வியாபாரத்தில் மேன்மையும், வளர்ச்சியும் கிடைக்கும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும், ஆனால் வேண்டாத செலவுகளை குறையுங்கள்.
காதல் விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆகாரம், ஆரோக்கியம், குழந்தைகள் சம்பந்தபட்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள். அஷ்டம சனியின் தாக்கம் வருட ஆரம்பத்தில் இருக்கும்.
வருடத்தின் பிந்திய காலம் உறவுகளில் நிதானமும் அன்பும் கொண்டு வாருங்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு தினமும் விளக்கு ஏற்றி பூஜை செய்யுங்கள்.

ரிஷபம் / Rishabam

ரிஷபம்பொருளாதார நிலைமை நார்மலாக இருக்கும். சேமிப்பு அதிகம் ஆகும். எதிர் இனத்தவர்களால் லாபம் உண்டு. காதல் விவகாரத்தில் நிலைமை சரி இல்லை என்றால், கவலை பட வேண்டாம். சூழ்நிலை மாறும். செய்கின்ற வேலையில் மன நிறைவும் வெற்றியும் கிட்டும். இந்த வருடம் முழுதும் அஷ்டம சனியின் பிடியில் இருப்பீர்கள். உடல் பயிற்சிக்கு மகத்துவம் கொடுங்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். பெரியோர்களின் அன்பும் ஆசீர்வாதமும, தந்தையின் ஆதரவும் உங்களுக்கு இந்த வருடம் நிறைய இருக்கிறது.

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை தினமும் காலை மாலை ஆராதனை செய்யுங்கள். அருள் கிடைக்கும்.

மிதுனம் / Midhunam

மிதுனம் இந்த வருடம் ஏற்றமும் தாழமும் இருக்கும். வருட ஆரம்பத்தில் கார்யம் தாமதம் ஆனாலும் மத்தியில் கார்யங்கள் பூர்த்தி அடையும். இதனால் மன நிம்மதியும், அமைதியும் கிடைக்கும். வாழ்கையில் ஆர்வம் காட்டுவீர்கள். கோர்ட் கேஸ் விவகாரங்களில் ரிலீஃப் உண்டு. தெய்வம், குரு, ஆசார்யர்கள் மீது பக்தி பாவனை அதிகரிக்கலாம். தடங்கல்கள் குறைய சான்ஸ் இருக்கிறது. ச்பெகுலேஷேன் கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருங்கள். பணவரவு சீராக இருக்கும். பணிவும் பெருந்தன்மையும் உங்களை பாபுலர் ஆக்கும்.

பரிகாரம்: பட்சிகளுக்கு உணவு கொடுங்கள். துர்கா பூஜை நன்மை செய்யும்.

கடகம் / Kadagam

கடகம் வருட ஆரம்பத்தில் தொல்லைகள் இருக்கும். வேலையில் இருக்கிறவர்கள் ஜூனியர்களிடம் அனுசரித்து செல்லவும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அன்பும் உங்கள் பக்கம். நம்பர்களும் உறவினர்களும் ஆதரவு கொடுப்பார்கள். வரவு செலவு மீது கண் வையுங்கள். சேமிப்பு திட்டத்தை விரிவு செய்யுங்கள். வியாபாரத்திற்கு உகந்த வருடம். ஆனால் இன்வெஸ்ட்மென்ட் விஷயத்தில் கவனம் வேண்டும். உணர்ச்சி வசப்படாமல் நிர்ணயம் செய்யுங்கள். வருட மத்தியில் சுப கார்யங்களில் பண விரயம் ஆகும். அரசியலில் இருக்கிறவர்களுக்கு நல்ல நேரம். குடும்பத்தில் சந்தோசம் அமைதி காண்பீர்கள். புது வேலை, செய்கிற தொழிலில் நல்ல மாற்றம் இருக்கும்.

பரிகாரம்: மஹாதேவரின் பூஜை ஆராதனை நிம்மதி தரும்.

சிம்மம் / Simmam

சிம்மம் உடல் ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பொருளாதார நிலைமை ரொம்ப நன்றாக உள்ளது. வருடத்தின் பிற்பகுதியில் பாக்கியம் சூப்பர் ஆகா இருக்கும். கடினமாக உழைக்காமல் நிறைய சம்பாதிபீர்கள். சொத்து சம்பந்த விஷயங்களில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் லாபம் உண்டு. குழந்தைகளின் விஷயத்தில் கவனமாக இருங்கள். தாம்பத்திய உறவுகளில் பாலன்ஸ் கொண்டு வாருங்கள். லைஃப் பார்ட்னரின் ஃபீலிங்க்ஸ்கு மதிப்பு கொடுங்கள். மாணவர்கள் இந்த வருடம் பிரகாசிப்பார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் அனுகூலம். நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடம் இருந்து படு உஷாராக இருங்கள்.

பரிகாரம்: சூர்யனுக்கு காலை நேரம் ஜலம் அற்பணியுங்கள். ஸ்தோத்ரம் படியுங்கள்.

கன்னி / Kanni

கன்னி வருட ஆரம்பத்தில் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். பிஸினெஸ், இன்வெஸ்ட்மென்ட் விவகாரங்களில் நிதானம் தேவை. மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். மீடியா, ஆர்ட்ஸ் போன்ற துறைகளில் இருக்கிறவர்கள் வளம் காண்பார்கள். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். தார்மீக காரியத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடம் தர வேண்டாம். சிலருக்கு விதேஷ பிரயாணம் செய்யவும் பலமான சான்ஸ் இருக்கிறது.

பரிகாரம்: சாத்வீக உணவு, யோக அப்யாசம் நன்மை செய்யும். சநீஸ்வரனுக்கு பரிகாரம் செய்யுங்கள்.

துலாம் /Thulaam

துலாம் பண வரவும் பொருளாதார நிலைமையும் சீராக இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கவும் யோகம் இருக்கிறது. புதிய தொழில் செய்ய விரும்புகிறவர்கள் லாபம் எதிர் பார்க்கலாம். வருட முடிவில் பெரிய அளவில் பண இன்வெஸ்ட்மென்ட் செய்ய வேண்டாம், அல்லது ரொம்ப ஜாக்கிரதையாக முடிவு எடுக்கவும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கண்டிப்பாக இருங்கள். வீடு நிலம் வாங்குவதற்கு முன்பு வீட்டில் இருக்கும் பெரியோர்களின் ஆலோசனை தெரிந்து கொள்ளவும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும். எதிரிகளின் தொந்திரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அன்பாகவும் பணிவாகவும் இருக்கவும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். காதல் விவஹாரத்தில் நிலைமை அறிந்து நடந்து கொள்ளுங்கள். கல்யாண வயதில் இருக்கிரவர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது.

பரிகாரம்: ஏழை குழந்தைகளுக்கு உணவு கொடுங்கள், உதவி செய்யுங்கள்.

விருச்சிகம் / Viruchigam

விருச்சிகம் இந்த வருடம் சுமுகமாக இருக்கும். வரவு செலவில் தியானம் காட்டுங்கள். சுப காரியத்தில் நாட்டம் இருக்கும். இந்த வருடம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தைர்யமாக இருப்பீர்கள். தாம்பத்திய உறவில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அதற்கு தீர்வு காண்பீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் சந்தோசம் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். உங்களுடைய குடும்ப வாழ்கை இந்த வருடம் சூப்பர் ஆக இருக்கும். புதிய நட்பு கிட்டும். காதல் விஷயங்களில் வெற்றி கிட்டும். வாழ்வு முறையை சீர் செய்யவும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்ன தானம் செய்யவும். ஏழைகளிடம் அன்பாக இருங்கள்.

தனுசு / Dhanusu

தனுசு இந்த வருடம் வியாபாரத்திற்கு செழிப்பும் வளமும் தரும். வருட முடிவில் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் பண முதலீடு செய்யவும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. எந்த முடிவு எடுக்கும் முன், அதன் விளைவுகளை பற்றி யோசியுங்கள். மனோவிஞானம், அமானுஷ்ய அறிவியல் சம்பந்த பட்ட மாணவர்களுக்கு நல்ல நேரம். வேலையில் ப்ரமோஷன், ஊதிய உயர்வு நிச்சயம். பிரயாணங்களுக்கு இந்த வருடம் மிகவும் உகந்தது. ஆன்மிகம், தார்மீகம் சம்பந்த பட்ட விஷயங்களில் நல்ல யோகம் இருக்கிறது. ஹெல்த, லவ் லைஃப் போன்ற சமாசாரங்களில் நிதானம் தேவை.

பரிகாரம்: மகாவிஷ்ணுவிற்கு பூஜை செய்யுங்கள்.

மகரம் / Magaram

மகரம் பண வரவு சீராக இருந்தாலும் செலவு பார்த்து செய்யுங்கள். கொடுக்கல் வனங்கள் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள். வியாபாரிகளுக்கு இந்த வருடம் பிரமாதமாக இருக்கும். திடீர் பண வரவு யோகம் இருக்கிறது. காம்படீடிவ் பரீட்சைகளில் வெற்றி கட்டாயம். பதவி உயர்வும், செல்வாக்கும், ஊதிய உயர்வும் பணியில் இருக்கின்றவர்களுக்கு நிச்சயம். உயர் கல்விக்காக வெளிநாட்டு பிரயாணம் ப்ளான் செய்கிறவர்களுக்கு நல்ல நேரம். குடும்பத்தில் அமைதியும் அன்பும் நிலவும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்ன தானம் எல்லா விஷயத்திலும் நல்லது செய்யும்.

கும்பம் / Kumbam

கும்பம் இந்த வருடம் நிறைய காயங்கள் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய விரோதிகள் உங்கள் பேச்சு வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பலன்கள் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். சமயம் வரும்போது எல்லாம் விஷயங்களிலும் மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கும். உறவு சம்பந்தங்களை பேலேன்ஸ் செய்து வாருங்கள். தாம்பத்திய உறவுவில் புத்துணர்ச்சி கொண்டு வர வேண்டியது அவசியம்.

பரிகாரம்: பைரவருக்கு தினமும் பூஜை செய்யுங்கள்.

மீனம் / Meenam

மீனம் இந்த வருடத்தின் முற்பகுதியில் கவனமாகவும் நிதானமாகவும் செயற்படுங்கள். விரோதிகளின் தொந்தரவு குறையும். நல்ல சகவாசம் கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டி வரும். அதற்கு தகுந்த சன்மானமும் கிட்டும். பாசிடிவ் அட்டிடியுட் உங்களுக்கு மிகவும் நன்மை தரும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் நிச்சயம். வேலை செய்யும் இடத்தில் அன்பாகவும் பணிவாகவும் இருங்கள். குடும்பத்தாருடன் சுட்ருலா பிளான் செய்யுங்கள். காதல் விவகாரத்தில், உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருங்கள்.

பரிகாரம்: மஹாவிஷ்ணுவிற்கு வியாழன் தோறும் பூஜை, ஆராதனை, நைவேத்யம் செய்யுங்கள்.

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்