வரணிப் பாடசாலையில் நடந்தது என்ன?

வரணிப் பாடசாலையில் நடந்தது என்ன?
தென்மராட்சிக் கல்வி வலயத்திலுள்ள வரணிப் பிரதேசப் பாடசாலையில் அண்மையில் நடந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் பற்றி பலராலும் பலவிதமாகப் பேசப்படுகின்றது.

அங்கு பாலியல் துஸ்பிரயோகம் நடந்ததேயன்றி பாலியல் வல்லுறவு நடக்கவில்லை. இவ்விரண்டு சொற்பிரயோகங்களிற்குமிடையிலான வேறுபாட்டை சமூகத்தில் பலர் விளங்கிக் கொள்ளவில்லை என அறிய முடிகின்றது. மருத்துவ அறிக்கையும் அத்தகைய உறவுச் சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக அறிகின்றேன்.

எது எவ்வாறாயினும் துஸ்பிரயோகம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டியவரே. அதற்கான நடவடிக்கைகளை நீதிமன்று உரிய வழிவகைகளில் மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.
ஆனால் இக்குற்றத்திற்கு துணைபோனவர்கள் என்று கைது செய்யப்பட்டுள்ள 3 அப்பாவிப் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்.


எமது ஊடகங்கள் அங்கு ஏதோ கூட்டு வன்புணர்வு இடம்பெற்றது போன்ற தோற்றப்பாட்டை பாமர மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது சமூகத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
எம் மத்தியில் சட்டம், சமூக விழுமியங்கள் என்ற இரண்டு பொறிமுறைகள் தொழிற்படுவது யாவரும் அறிந்ததே.
உண்மையில் அந்த அப்பாவி ஆசிரியர்கள் செய்தது இரண்டாவது பொறிமுறையையே என்பதை தீர விசாரித்து அறிந்து கொண்டு உங்களுடன் பகிர்கின்றேன். அதாவது வல்லுறவு நடைபெறவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் அப் பெண்ணுக்கு எவ்வித சமூகக் களங்கமும் ஏற்படக் கூடாதென்ற வகையிலேயே நடந்த சம்பவத்தை மறைக்க முற்பட்டனரேயன்றி குறித்த ஆசிரியரை காப்பாற்றும் நோக்கில் அல்ல. இவ்வாறு செய்வதன் மூலம் பாடசாலையின் நற்பெயரையும் ஊரின் பெயரையும் கூட காக்க அவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால் இன்று விளக்கமறியலில் இவர்கள் வைக்கப்பட்டுள்ளமை பெரும் துன்பியல் நிகழ்வே.


நடக்கும் நிகழ்வுகளை அவதானிக்கும் போது ஒரு பரத்தையை ஊரவர்கள் கல்லெறிந்து துரத்திவர அவள் இயேசு நாதரிடம் சரணடைய கல்லெறிபவர்களை நோக்கி இயேசு நாதர் கூறிய மொழிகள் தான் நினைவுக்க வருகின்றது

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்